/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/192_15.jpg)
மகேந்திரன் இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சாருஹாசன். கமல்ஹாசனின் அண்ணனான இவர், தமிழைத் தாண்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தபரன கதே என்ற கன்னட படத்தில் நடித்தற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக மோகன் நடிப்பில் அண்மையில் வெளியான ஹரா படத்தில் நடித்திருந்தார்.
93 வயதான இவர் தற்போது மருத்துவமனையில் உள்ளார். வயது மூப்பு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை சாருஹாசனின் மகளும் நடிகையுமான சுஹாசினி அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் , அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)